நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் மறைக்க எதுவும் இல்லை: டத்தோ இஷாம் ஹாஷிம்

சுபாங்ஜெயா:

புத்ரா ஹைட்ஸில் நடந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் மறைக்க எதுவும் இல்லை.

அதற்கான காரணத்தை அடையாளம் காண விசாரணை நடந்து வருவதாக சிலாங்கூர் உள்கட்டமைப்பு,  வேளாண்மை  துறையின் ஆட்சிக் குழு உறுப்பினர் தலைவர் டத்தோ இஷாம் ஹாஷிம் கூறினார்.

இந்த சம்பவம் பல்வேறு தரப்பினரை உள்ளடக்கியது. இவை அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் இப்போதைக்கு, சம்பந்தப்பட்ட இடத்தில் பாதுகாப்பிற்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

காரணம் பிற எழும் பிரச்சினைகள் குறித்து விசாரிக்க நேரம் எடுக்கும். அனைத்து தரப்பினரும் பொறுமையாக இருந்து விசாரணையின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும்.

உண்மையான காரணத்தை விசாரிக்க சிறிது நேரம் எடுக்கும், உறுதியான ஆதாரங்கள் கிடைத்தவுடன் மந்திரி புசார் அதை அறிவிப்பார்.

எங்களுக்கு மறைக்க எதுவும் இல்லை, ஆனால் அந்த விசாரணை நேரம் எடுக்கும்.

புத்ரா ஹைட்ஸில் நடந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் குறித்து சம்பவக் கட்டுப்பாட்டு மையத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset