நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்காவின் வரி மலேசியாவின் நேரடி அந்நிய நாட்டு முதலீட்டு வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும் 

ஜார்ஜ் டவுன்:

அமெரிக்காவின் 24% வரி எதிர்காலத்தில் மலேசியாவின் நேரடி அந்நிய நாட்டு முதலீட்டு வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும் என்று பினாங்கு மாநில அரசாங்கத்தின் முதலீட்டு பிரிவான InvestPenang தெரிவித்துள்ளது.

இந்தப் பரஸ்பர வரி விதிப்பு முதலீட்டாளர்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். 

இது எதிர்கால அந்நிய நேரடி முதலீட்டிற்கான றிப்பாக அதிக மதிப்புள்ள உற்பத்தித் துறைகளில் மலேசியாவின் ஈர்ப்பைக் குறைக்கலாம் என்றும் InvestPenang கூறியுள்ளது.

ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் உற்பத்தியை குறைந்த கட்டணமுள்ள நாடுகளுக்கு மாற்றுவது உள்ளிட்ட விநியோகச் சங்கிலி மறுசீரமைப்புகளை ஆராய்ந்து வருவதாகவும் InvestPenang தெரிவித்துள்ளது.

அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தம் (USMCA) காரணமாக மெக்சிகோவில் ஏற்கனவே செயல்பாடுகளைக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் (MNCs) மெக்சிகோவிற்கு உற்பத்தி மாற்றங்களை பரிசீலித்து வருவதாக InvestPenang தெரிவித்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset