நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செமினி சட்டமன்ற உறுப்பினரின் ஆலய வருகையை பாஸ், ஜசெக தலைவர்கள் தற்காத்தனர்

செமினி:

சமூக ஊடகங்களில் கலவையான எதிர்வினைகளைத் தூண்டிய செமினி சட்டமன்ற உறுப்பினர் நுஷி மஹ்ஃபோட்ஸின்  சமீபத்திய ஆலய வருகையைப் பாதுகாக்க பாஸ், ஜசெக  தலைவர்கள் தற்காத்துள்ளனர்.

நுஷியின் ஆலயம் வருகை நல்லெண்ண அடிப்படையில் அமைந்தது. மத சடங்குகளில் அவர் பங்கேற்கவில்லை என்று பாஸ் மத்திய தகவல், ஆராய்ச்சி, கொள்கைத் துறையின் இயக்குநர் நூருல் இஸ்லாம் முகமது யூசோப் கூறினார்.

அவர் ஏற்பாடு செய்த இப்தாரில் கலந்து கொண்ட பிறகு, நுஷி ஆலயத்தக்கு சென்றார்.

அவர் எந்த மத விழாக்களிலும் ஈடுபடவில்லை. அவருக்கு இந்து மதம் பற்றிய விளக்கம் மட்டுமே வழங்கப்பட்டது.

இதுதான் மறைந்த நிக் அப்துல் அஜீஸ்ம், அப்துல் ஹாடி அவாங் ஆகியோருக்கும் நடந்தது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

முன்னதாக நுஷியின் செயல்களை மக்கள் பிரதிநிதியின் அடிப்படைப் பொறுப்பு என்று  ஜசெகவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் சியாரெட்சான் ஜோஹான் கூறினார்.

மக்கள் பிரதிநிதிகள் தங்கள் சொந்த சமூகத்தை மட்டுமல்ல, அனைத்து இனங்களையும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset