
செய்திகள் மலேசியா
செல்லுபடியாகாத ஹலால் சின்ன சான்றிதழை காட்சிப்படுத்திய குற்றத்தை உணவக உரிமையாளர் ஒப்புக் கொண்டார்
கோத்தாபாரு:
செல்லுபடியாகாத ஹலால் சின்ன சான்றிதழை காட்சிப்படுத்திய குற்றத்தை கோத்தாபாருவில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு உணவக உரிமையாள ஒப்புக்கொண்டார்.
வழக்குத் தொடரப்பட்ட நபராக 48 வயதான லிம் பெங் கீ, 2024ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி மதியம் 12.46 மணிக்கு கோத்தாபாருவில் உள்ள ஜாலான் டெமெங்கோங்கில் உள்ள தனது வணிக வளாகத்தில் இந்தக் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 100,000 ரிங்கிட்டுக்கு குறையாமல்அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
வழக்கு விசாரணையின் போது, உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் வழக்குத் தொடரும் அதிகாரி முகமது இமான் மஸ்ஜூரி 10,000 ரிங்கிட் ஜாமீன் வழங்கினார்.
ஆனால் வழக்கறிஞர் பிரதிநிதித்துவப்படுத்தாத குற்றம் சாட்டப்பட்டவர் தன்னிடம் போதுமான பணம் இல்லாததால் தொகையைக் குறைக்குமாறு மேல்முறையீடு செய்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி சூல்கிப்லி அப்துல்லா, ஒரு உத்தரவாதத்துடன் 8,000 ரிங்கிட் ஜாமீன் வழங்கினார்.
மேலும் மே 13 ஆம் தேதி தீர்ப்பு வழங்கும் தேதியாக நிர்ணயித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 17, 2025, 1:00 pm
இளம்பெண் கடத்தல் வழக்கு: 50 வயது மதிக்கத்தக்க மற்றொரு சந்தேக நபர் 14 நாட்கள் தடுத்து வைப்பு
April 17, 2025, 12:08 pm
சீனாவுடனான பரஸ்பர விசா விலக்குகள் கல்வி, சுற்றுலா துறைகளை மேம்படுத்தும்: விஸ்மா புத்ரா
April 17, 2025, 11:53 am