
செய்திகள் மலேசியா
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் பிஎஸ்எம் கட்சியின் சார்பில் பவானி மீண்டும் போட்டி
தாப்பா:
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் பிஎஸ்எம் கட்சியின் சார்பில் பவானி மீண்டும் போட்டியிடவுள்ளார்.
பிஎஸ்எம் கட்சியின் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் இதனை அறிவித்தார்.
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் பிஎஸ்எம் கட்சியின் சார்பில் இளம், கொள்கை ரீதியான வேட்பாளரான பவானி போட்டியிடவுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் அந்த்அ தொகுதியில் ஐந்து முனைப் போட்டியில் பவானி போட்டியிட்டார்.
அதன் அடிப்படையில் அவர் இரண்டாவது முறையாக அத்தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
அந்த நேரத்தில் தோற்ற போதிலும், மாற்றுக் குரலாகத் தோன்றுவதற்கான அவரது துணிச்சல் அவரை பிஎஸ்எம் இன் தேர்வாக மாற்றியது.
ஆயிர் கூனிங்கைச் சேர்ந்த பவானி, உள்ளூர் சமூகத்தினரால் மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுபவர் என்று அறியப்படுகிறார்.
மாநில அரசியல் களத்தில் ஒரு புதிய கதையைக் கொண்டுவர முயன்ற மூன்றாவது குரல் தளத்தை அவர் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று ஜெயக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 17, 2025, 3:02 pm
விதை நெல் விலை அவ்வப்போது மறு மதிப்பீடு செய்யப்படும்: மாட் சாபு
April 17, 2025, 2:31 pm
கோலாலம்பூர் கோபுரம் அரசாங்கத்திற்கு சொந்தமானது: ஃபஹ்மி ஃபாட்சில்
April 17, 2025, 1:00 pm
இளம்பெண் கடத்தல் வழக்கு: 50 வயது மதிக்கத்தக்க மற்றொரு சந்தேக நபர் 14 நாட்கள் தடுத்து வைப்பு
April 17, 2025, 12:08 pm