
செய்திகள் மலேசியா
புத்ரா ஹைட்ஸில் 270 வீடுகள் மீண்டும் குடியேறப் பாதுகாப்பானவை: ஹுசைன் ஒமர் கான்
சுபாங் ஜெயா:
புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடிப்பால் பாதிக்கப்பட்ட 270 வீடுகள் மீண்டும் குடியேறப் பாதுகாப்பானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் தெரிவித்தார்.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வெடிப்பு நடந்த இடத்திலிருந்து 325 மீட்டர் சுற்றளவில் ஒரு மதிப்பீட்டை மேற்கொண்ட பிறகு டத்தோ ஹுசைன் ஒமர் கான் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.
நேற்று காவல்துறை 151 வீடுகள் மீண்டும் குடியேறப் பாதுகாப்பனவை என அறிவித்தது.
இன்று மேலும், 119 வீடுகள் மீண்டும் குடியேறப் பாதுகாப்பனவை என காவல்துறை அறிவித்தது.
இந்த 270 வீடுகளில் சில வீடுகளில் பழுதுபார்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் இன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 17, 2025, 1:00 pm
இளம்பெண் கடத்தல் வழக்கு: 50 வயது மதிக்கத்தக்க மற்றொரு சந்தேக நபர் 14 நாட்கள் தடுத்து வைப்பு
April 17, 2025, 12:08 pm
சீனாவுடனான பரஸ்பர விசா விலக்குகள் கல்வி, சுற்றுலா துறைகளை மேம்படுத்தும்: விஸ்மா புத்ரா
April 17, 2025, 11:53 am