நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்காவுக்கான தளவாடப் பொருள்களின் ஏற்றுமதியை நிறுத்தி வைக்கும் மலேசியா

கோலாலம்பூர்: 

நாட்டின் தளவாடத் தொழிற்துறைகள், அமெரிக்காவுக்கான ஏற்றுமதியைத் தற்காலிகமாகத் தாமதப்படுத்த முடிவு செய்துள்ளன.

பொருள்களுக்கு அமெரிக்கா 24% வரி விதித்துள்ளதே இதற்குக் காரணமாகும். 

மலேசிய தளவாடத் தொழிற்துறை மன்றத்தின் துணைத் தலைவரான மாத்யூ லா, குறிப்பிடத்தக்க வரி விதிப்பால் சந்தையின் சூழ்நிலை நிச்சயமற்றதாக இருப்பதாகவும் சில தயாரிப்பாளர்கள் ஏற்றுமதியை ஒத்தி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்க வாடிக்கையாளர்கள் சரக்குகள் அனுப்புவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

நாட்டின்  தளவாட தொழில்துறைக்கு அமெரிக்கா முக்கிய சந்தையாக விளங்குகிறது. 

மலேசியாவின் 60 விழுக்காடு ஏற்றுமதி அமெரிக்காவுக்குச் செல்கிறது. 

இவ்வாண்டு பிப்ரவரி வரையில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மலேசிய தளவாடப் பொருட்களின் மதிப்பு 12.82 பில்லியன் ரிங்கிட்டாகும்.

மலேசியாவின் முக்கிய ஏற்றுமதிகளான மர அறைகலன்கள், உணவு மேசை, நாற்காலி, சோஃபா போன்றவை முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset