நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பகடிவதை சம்பவம் தொடர்பாக ஐவரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன

ஜார்ஜ் டவுன்:

சமூக ஊடகங்களில் வைரலான மாரா அறிவியல் கல்லூரியில் நிகழ்ந்த பகடிவதை சம்பவம் தொடர்பாக மாணவர்களிடமிருந்துவாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

ஐந்து  போலீசார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைக்காக 15 வயதுடைய அனைத்து மாணவர்களின் வாக்குமூலங்களும் இன்று பதிவு செய்யப்பட்டதாகத் தெற்கு செபராங் பிறை மாவட்டத் காவல்துறைத் துணை  தலைவர் முஹம்மத் நோராஸ்மி அப்துல் காபர் கூறினார். 

விசாரணையின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர், காணொலி பதிவு செய்தவர் உட்பட ஏழு பேர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இரண்டு வாக்குமூலங்கள் விரைவில் பதிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

விசாரணை அறிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு பின் அரசு துணை வழக்கறிஞர் அலுவலகத்தில் மேலதிக நடவடிக்கைகளுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset