நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறுத்தை  தாக்கிய அதிர்ச்சியிலிருந்து தாம் இன்னும் மீளவில்லை: சுரேஷ்

சிரம்பான்:

சிரம்பான், புக்கிட் தங்காவில் சாலையில் சிறுத்தை தாக்கிய லாரி  ஓட்டுநரின் தலையில் 30க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டன.

பாதிக்கப்பட்ட 54 வயதான சுரேஷ், மூன்று நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்ப அனுமதிக்கப்பட்டார்.

சிறுத்தை  தாக்கி அதிர்ச்சியிலிருந்து தாம் இன்னும் மீளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

கனவிலும் சிறுத்தைத் தாக்குவது போல் இருப்பதாகவும் இப்படி ஒரு சம்பவம் நிகழும் என்று தாம் எதிர்ப்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.

கோழி தீவனத்தை ஜெலுபுவில் இறக்கி விட்டு கோலாலம்பூருக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

தனது லாரியின் நிலையைச் சரிபார்க்க அந்த இடத்தில் இறக்கி நின்ற போது எங்கிருந்தோ வந்த சிறுத்தை தாக்கியுள்ளது. 

சிறுத்தையுடன் போராடியதாகவும் அதன் வாயில் ஒரு புட்டியை சொருகியதாகவும் அவர் குறிப்பிட்டார், 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset