நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிவாயு குழாய் தீ விபத்து: குத்தகையாளர், தொழிலாளர்கள் உட்பட 15 நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது: போலிஸ்

சுபாங்ஜெயா:

எரிவாயு குழாய் தீ விபத்து தொடர்பில் குத்தகையாளர், தொழிலாளர்கள் உட்பட 15 நபர்களிடம் போலிசார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

சிலாங்கூர் மாநில போலிஸ்  தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் இதனை கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்து சம்பவம் நடந்தது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவ குத்தகை தொழிலைச் சேர்ந்த 15 நபர்கள் உட்பட 118 சாட்சிகளிடமிருந்து போலிசார் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.

இந்த 15 பேரில் துணை குத்தகையாளர்களும் ஊழியர்களும் அடங்குவர்.

இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி  இந்த விவகாரம் தொடர்பில் 642 புகார்கள் வந்துள்ளது.

அதில் சம்பவம் நடந்ததற்கு முந்தைய இரவு மார்ச் 31 அன்று யாரோ ஒருவர் பட்டாசுகளுடன் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறும் ஒரு புகாரும் அடங்கும்.

இருப்பினும், பட்டாசுகளுடன் விளையாடுவது ஒரு சம்பவத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்று ஹுசைன் நம்பவில்லை.

மேலும் போலிசார்  முழு விசாரணை அறிக்கைக்காகக் காத்திருப்பதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset