
செய்திகள் மலேசியா
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தில் 219 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன: போலிஸ்
சுபாங்ஜெயா:
சுபாங் ஜெயா புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்தில் மொத்தம் 219 வீடுகள் முழுமையாக சேதமடைந்ததாக கண்டறியப்பட்டது.
அதே நேரத்தில் 220 வீடுகள் பாதுகாப்பாகவும் பாதிப்பின்றியும் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் கூறினார்.
சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறை (ஜேபிபிஎம்), பயன்பாட்டு நிறுவனங்கள், உள்ளூர் அதிகாரிகள் ஆகியோரால் நிலநடுக்க மையத்திலிருந்து 325 மீட்டர் சுற்றளவில் 439 வீடுகள் பற்றிய இறுதி மதிப்பீட்டில் இது கண்டறியப்பட்டது.
மொத்தத்தில், 87 வீடுகள் 20 சதவீதத்திற்கும் அதிகமான பெரிய சேதத்தை சந்தித்தன.
மேலும் 132 வீடுகள் 20 சதவீதத்திற்கும் குறைவான சிறிய சேதத்தை சந்தித்தன என்று அவர் கூறினார்.
இன்று கோலாலம்பூருக்கு அருகிலுள்ள புத்ரா ஹைட்ஸ் சம்பவக் கட்டுப்பாட்டுச் சாவடியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 8, 2025, 6:00 pm
பகடிவதை சம்பவம் தொடர்பாக ஐவரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன
April 8, 2025, 5:33 pm
அமெரிக்காவின் வரி மலேசியாவின் நேரடி அந்நிய நாட்டு முதலீட்டு வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும்
April 8, 2025, 5:11 pm
புத்ரா ஹைட்ஸில் 270 வீடுகள் மீண்டும் குடியேறப் பாதுகாப்பானவை: ஹுசைன் ஒமர் கான்
April 8, 2025, 4:39 pm
அமெரிக்காவுக்கான தளவாடப் பொருள்களின் ஏற்றுமதியை நிறுத்தி வைக்கும் மலேசியா
April 8, 2025, 4:05 pm
சிறுத்தை தாக்கிய அதிர்ச்சியிலிருந்து தாம் இன்னும் மீளவில்லை: சுரேஷ்
April 8, 2025, 3:36 pm
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் மறைக்க எதுவும் இல்லை: டத்தோ இஷாம் ஹாஷிம்
April 8, 2025, 3:35 pm
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் பிஎஸ்எம் கட்சியின் சார்பில் பவானி மீண்டும் போட்டி
April 8, 2025, 3:34 pm