
செய்திகள் மலேசியா
புத்ரா ஹைட்ஸ் சம்பவத்தை விசாரிக்கும் போலிஸ் துறையை மக்கள் நம்ப வேண்டும்: சைபுடின்
சுபாங்ஜெயா:
சுபாங் ஜெயா புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்து குறித்து விசாரணை நடத்துவதில் போலிஸ்படையை பொதுமக்கள் முழுமையாக நம்ப வேண்டும்.
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் இதனை கூறினார்.
இந்த துயர சம்பவத்தின் தொடக்கத்திலிருந்தே போலிசார் ஈடுபட்டிருந்தனர். இப்போது வரை அவர்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
எனக்கு அவ்வப்போது போலிஸ் துறையினரிடமிருந்து சமீபத்திய தகவல்கள் வரும். போலிஸ் துறை அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய விசாரணையை முடிக்கட்டும்.
ஆதாரங்களைச் சேகரிக்கும் முயற்சிகளுக்கு நல்ல விசாரணை, ஒழுக்கம் தேவை.
எனவே, போலிஸ் துறை தங்கள் பணியை முடிக்கும் என்று பொதுமக்கள் நம்ப வேண்டும் என்று தாம் கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 8, 2025, 6:00 pm
பகடிவதை சம்பவம் தொடர்பாக ஐவரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன
April 8, 2025, 5:33 pm
அமெரிக்காவின் வரி மலேசியாவின் நேரடி அந்நிய நாட்டு முதலீட்டு வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும்
April 8, 2025, 5:11 pm
புத்ரா ஹைட்ஸில் 270 வீடுகள் மீண்டும் குடியேறப் பாதுகாப்பானவை: ஹுசைன் ஒமர் கான்
April 8, 2025, 4:39 pm
அமெரிக்காவுக்கான தளவாடப் பொருள்களின் ஏற்றுமதியை நிறுத்தி வைக்கும் மலேசியா
April 8, 2025, 4:05 pm
சிறுத்தை தாக்கிய அதிர்ச்சியிலிருந்து தாம் இன்னும் மீளவில்லை: சுரேஷ்
April 8, 2025, 3:36 pm
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் மறைக்க எதுவும் இல்லை: டத்தோ இஷாம் ஹாஷிம்
April 8, 2025, 3:35 pm
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் பிஎஸ்எம் கட்சியின் சார்பில் பவானி மீண்டும் போட்டி
April 8, 2025, 3:34 pm