நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

161 ஆலயங்கள் தேசிய திவால் இலாகாவின் கட்டுப்பாட்டில் உள்ளன; மாரான் உட்பட பல ஆலயங்கள் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்கின்றன: சரஸ்வதி

கோலாலம்பூர்:

நாட்டில் கிட்டத்தட்ட 161க்கும் மேற்பட்ட ஆலயங்கள் தேசிய திவால் இலாகாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.

மாரான் மரத்தாண்டவர் ஆலயம்  உட்பட பல ஆலயங்கள் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்கின்றன என்று தேசிய ஒருமைப்பட்டுத் துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆலய மாநாட்டிலிருந்து பல தீர்மானங்களை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

நிலப் பிரச்சினைகள், ஆலய கோயில் மேலாண்மை குறித்து ஆராய மலேசிய இந்து சங்கத்தின் கீழ் ஒரு குழுவை அமைப்பது இந்த  தீர்மானங்களில் ஒன்றாகும்.

உண்மையில் நாட்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளன.

இந்த நடவடிக்கைகள் மலேசிய இந்து சங்கம் மிகவும் முன்கூட்டியே செயல்படுத்தப்படுகின்றன.

நில தொடர்பான பிரச்சினைகள் பொதுவாக மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் வரும். 

இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க மலேசிய இந்து சங்கத்துடன் இணைந்து பணியாற்ற சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்கள் வந்துள்ளன என்று நான் நினைக்கிறேன்.

மேலும் மலேசிய இந்து சங்கத்தை அரசாங்கம் முழுமையாக அங்கீகரிகிறது.

ஆகவே இந்து சங்கத்தின் பேச்சை நாங்கள் ஏன் கேட்க வேண்டும் என ஆலய நிர்வாகங்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. இது ஆலயங்களுக்கு தான் பாதிப்பாகும்.

இப்போது கூட 161 ஆலயங்கள் தேசிய திவால் இலாகாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. மாரான் உட்பட பல ஆலயங்கள் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்கின்றன.

இவை அனைத்தும் நிர்வாகப் பிரச்சினையால் ஏற்பட்டன என்று சரஸ்வதி கந்தசாமி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset