நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முகநூல் விளம்பர மோசடி: RM 651,800 இழந்த ஆடவர்

கோலாலம்பூர்:

ஆடவர் ஒருவர் சமூக ஊடகத்தில் வந்த முதலீட்டு விளம்பரத்தை நம்பி 650,000 ரிங்கிட்டை இழந்துள்ளார்.

Facebookஇல் வந்த விளம்பரத்தைப் பார்த்த அவர் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பு என எண்ணினார்.

உடனே அதற்கான இணைப்பில் தொடர்புகொண்டார். அவரது எண் Whatsapp குழு ஒன்றோடு இணைக்கப்பட்டது.

அதிலிருந்து 5 பேர் அவரை அடுத்தடுத்துத் தொடர்புகொண்டு முதலீட்டுத் திட்டத்தைப் பற்றி விளக்கியதாக The Star செய்தி கூறுகிறது.

அதனை நம்பி அந்த 45 வயது ஆடவர் 3 வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 25 முறை பணத்தைப் போட்டுள்ளார்.

இந்த ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதியிலிருந்து மார்ச் 27ஆம் தேதி வரை அவர் போட்ட மொத்தப் பணம் 651,800 ரிங்கிட்.

ஆனால் அவருக்குச் சொன்னபடி எந்த லாபமும் கிடைக்கவில்லை.

அப்போதுதான் தாம் ஏமாற்றப்பட்டதை ஆடவர் உணர்ந்ததாக அவர் கூறினார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset