நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலய ஒழுங்குமுறை அமைப்பை அமைக்க பிரதமர் துறைக்கு மலேசிய இந்து சங்கம் கோரிக்கை

கோலாலம்பூர்:

ஆலய  ஒழுங்குமுறை அமைப்பை அமைக்க பிரதமர் துறைக்கு மலேசிய இந்து சங்கம் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இதனை அச் சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் உறுதிப்படுத்தினார்.

மலேசிய இந்து சங்கம் இந்த அமைப்பை நிறுவக் கோரி ஒரு கோரிக்கை மனுவை சமர்ப்பித்தது.

பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கனிடம் அம் மகஜர் ஒப்படைக்கப்பட்டது.

இந்த அமைப்பு நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்களை ஒழுங்குபடுத்துவதற்கு பொறுப்பாகும்.

மேலும் ஆலய பதிவு விஷயங்கள், நில நிலை,  இந்த கோவில்கள் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பது ஆகியவை இதில் அடங்கும்.

மலேசிய இந்து ஆலயங்களுக்கான டிஜிட்டல் பதிவு முறையை நிறுவவும் இந்து சங்கம் முன்மொழிகிறது

இது அனைத்து ஆலயங்களின் பதிவுகளையும் அவற்றின் வருடாந்திர நிதி அறிக்கைகள் உட்பட வைத்திருக்கும்.

ஆலய நிர்வாகத்தில் நல்ல நிர்வாகத்தை உறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.

தற்போது நாட்டில் 2,500க்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. இதில் அரசாங்கம் பதிவு பெற்ற ஆலயங்கள் ஆயிரம் இருக்கும்.

நிலப் பிரச்சினை காரணமாக 1,500 ஆலயங்கள் பதிவு பெற முடியாமல் உள்ளது.

இருப்பினும் இந்த ஆலயங்கள் மலேசிய இந்து சங்கத்தில் பதிவு செய்துள்ளன என்று அவர் சொன்னார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset