
செய்திகள் மலேசியா
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் கசிவு விபத்து: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் விபத்து ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்கிறார்
கோலாலம்பூர்:
சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் கசிவு காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்து தொடர்பாக விபத்து நிகழ்ந்த இடத்தை ஆய்வு மேற்கொள்ள இன்று காலை மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் அவ்விடத்திற்கு வருகை மேற்கொள்கிறார்
மேலும், இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்திக்கவும் சன்மானம் வழங்கவும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இணக்கம் தெரிவித்துள்ளார்
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரின் வருகையை முன்னிட்டு விபத்து நிகழ்ந்த இடத்தில் அரச மலேசிய போலீஸ் படை, மின்சார வாரியம், பொதுப்பணி துறை, ஊராட்சி துறை ஆகியவை உட்படுத்திய அதிகாரிகள் காலை முதல் வந்த வண்ணம் உள்ளனர்
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி புத்ரா ஹைட்சில் நிகழ்ந்த இந்த எரிவாயு குழாய் கசிவு விபத்து காரணமாக சுமார் 30 மீட்டர் வரை தீ வான் நோக்கி தகதக வென எரிந்தது
இதில் 87 வீடுகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டன
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 5, 2025, 4:38 pm
மலாயாப் பல்கலைக்கழக இந்து சங்கத்தின் 29ஆம் ஆண்டு தேசிய அளவிலான சமயப் புதிர்ப் போட்டி
April 5, 2025, 4:36 pm
சாந்தா காளியப்பனின் விடியல் தூரமில்லை எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் நாளை வெளியீடு காண்கிறது
April 5, 2025, 4:33 pm