
செய்திகள் மலேசியா
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாமன்னர் 308,000 ரிங்கிட்டை தனிப்பட்ட நன்கொடையாக வழங்கினார்
சுபாங்ஜெயா:
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாமன்னர்
308,000 ரிங்கிட்டை தனிப்பட்ட நன்கொடையாக வழங்கினார்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இடத்தையும் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று பார்வையிட்டார்.
அதே வேளையில் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ள மக்களையும் மாமன்னர் சந்தித்தார்.
இந்நிலையில் மாமன்னர், சுல்தான் இப்ராஹிம் ஜொகூர் அறக்கட்டளை மூலம் மொத்தம் 308,000 ரிங்கிட் தனிப்பட்ட நன்கொடையை வழங்கினார்.
இதன் வாயிலாக இது புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்ட 308 குடும்பங்களுக்கு தலா 1,000 ரிங்கிட் வழங்கப்படும்.
இன்று காலை புரோட்டான் சத்ரியா நியோ காரை அவரே ஓட்டிக்கொண்டு மாமன்னர் மக்கள் தங்கியிருக்கும் மையத்திற்கு வருகை தந்தார்.
அவருடன் சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா, சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி ஆகியோரும் வந்தனர்.
அங்குள்ள மக்களை சந்தித்ததும் அவர் இந்த நிதி உதவியை வழங்கினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 5, 2025, 4:38 pm
மலாயாப் பல்கலைக்கழக இந்து சங்கத்தின் 29ஆம் ஆண்டு தேசிய அளவிலான சமயப் புதிர்ப் போட்டி
April 5, 2025, 4:36 pm
சாந்தா காளியப்பனின் விடியல் தூரமில்லை எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் நாளை வெளியீடு காண்கிறது
April 5, 2025, 4:33 pm