நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாந்தா காளியப்பனின் விடியல் தூரமில்லை எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் நாளை வெளியீடு காண்கிறது

கோலாலம்பூர்:

ஆசிரியரும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளருமான சாந்தா காளியப்பனின் விடியல் தூரமில்லை எனும் சிறுகதைத் தொகுப்பு நூல்  நாளை வெளியீடு காணவுள்ளது.

இவ்விழா நாளை ஏப்ரல் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு பிரிக்பீல்ட்ஸ் மலேசிய பார்வையற்றோர் சங்க மண்டபத்தில் நடைபெறும். 

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா. தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் இவ்விழாவிற்கு தலைமையேற்று நூல் வெளியீடு செய்யவுள்ளார்.

இந்த விழாவில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர். தொடர்புக்கு:  ம. முனியாண்டி - 016-444 2029.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset