
செய்திகள் மலேசியா
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து உதவியில் சிலாங்கூர் மாநில அரசு இரட்டைப் போக்குடன் செயல்படவில்லை: டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி
ஷா ஆலம்:
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து உதவியில் சிலாங்கூர் மாநில அரசு இரட்டைப் போக்குடன் செயல்படவில்லை.
மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி இதனை உறுதியாக கூறினார்.
புத்ரா ஹைட்ஸில் உள்ள பெட்ரோனாஸ் எரிவாயு குழாய் வெடித்து மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட உதவியில் இரட்டைப் போக்கு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை நான் முழுமையாக மறுக்கிறேன்.
மேலும் மாநில அரசும் பெட்ரோனாஸும் அதிகாரப்பூர்வ பங்களிப்புகளை ஒருங்கிணைக்கும் என்றும், அவை நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு, சரியான பெறுநர்களைச் சென்றடையும்.
தகுதியான எந்தவொரு பாதிக்கப்பட்டவரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் இது செய்யப்படுகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 5, 2025, 4:38 pm
மலாயாப் பல்கலைக்கழக இந்து சங்கத்தின் 29ஆம் ஆண்டு தேசிய அளவிலான சமயப் புதிர்ப் போட்டி
April 5, 2025, 4:36 pm
சாந்தா காளியப்பனின் விடியல் தூரமில்லை எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் நாளை வெளியீடு காண்கிறது
April 5, 2025, 4:33 pm