
செய்திகள் மலேசியா
நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக அபாங் இஸ்கண்டார் அபாங் ஹஷிம் நியமிக்கபடக்கூடும்: நீதித்துறை வட்டாரங்கள் தகவல்
கோலாலம்பூர்:
நாட்டின் அடுத்த புதிய தலைமை நீதிபதியாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக உள்ள அபாங் இஸ்கண்டார் அபாங் ஹஷிம் நியமிக்கப்படுவார் என்று நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன
நடப்பு தலைமை நீதிபதியாக உள்ள தெங்கு மைமுன் துவான் மாட் எதிர்வரும் ஜூன் மாதம் பணி ஓய்வு பெறுவதால் அவருக்கு பதில் அபாங் இஸ்கண்டார் நியமிக்கப்படுவார் என்று சொல்லப்பட்கிறது
அபாங் இஸ்கண்டார் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால் சரவாக் மாநிலத்திலிருந்து முதல் நீதிபதி நாட்டின் தலைமை நீதிபதி பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார் என்ற வரலாறு இருக்கும்
இருப்பினும், ஜூலை மாதம் கட்டாய பணி ஓய்வு பெறும் நீதிபதி பட்டியலில் அபாங் இஸ்கண்டார் இடம்பெறும் பட்சத்தில் ஆறு மாதத்திற்கு தலைமை நீதிபதியாக தனது பணியைத் தொடர்வார்
இந்த பணி நீட்டிப்புக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் இணக்கம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
66 வயது வரை ஒரு நீதிபதி தனது பதவிக்காலத்தை மேற்கொள்ள முடியும். அத்துடன் நடப்பில் இருக்கும் பணி காலத்துடன் இணைந்து ஆறு மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்ய கூட்டரசு அரசியலமைப்பு விதி 125 கூறுகின்றது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 5, 2025, 4:38 pm
மலாயாப் பல்கலைக்கழக இந்து சங்கத்தின் 29ஆம் ஆண்டு தேசிய அளவிலான சமயப் புதிர்ப் போட்டி
April 5, 2025, 4:36 pm
சாந்தா காளியப்பனின் விடியல் தூரமில்லை எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் நாளை வெளியீடு காண்கிறது
April 5, 2025, 4:33 pm