நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய தொழில்முனைவோருக்கு பயிற்சியளிக்க புதிய திட்டம்; இலவசமாக வழங்கப்படும்: டத்தோஶ்ரீ ரமணன்

புத்ரா ஜெயா:

இந்திய தொழில்முனைவோரை மேம்படுத்தும் திட்டம் இந்திய தொழில்முனைவோருக்கு இலவச வணிக மேலாண்மை பயிற்சியை வழங்கும்.

தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் இதனை அறிவித்தார்.

தெக்குன் நேஷனலுடன் இணைந்து, இந்திய தொழில்முனைவோர் தங்கள் வணிகங்களை நிர்வகிக்க உதவும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இம்முயற்சி அமையும்.

தெக்குனில் இருந்து நிதி பெற்ற இந்திய தொழில்முனைவோருக்கு நாடு தழுவிய அளவில் இப்பயிற்சி நடத்தப்படும்.

இந்த திட்டத்தின் தொடக்கமாக சிலாங்கூர்,  கோலாலம்பூரைச் சேர்ந்த தொழில்முனைவோர்  பயிற்சிகள் வழங்கப்படும். இப் பயிற்சிகள் விரைவில் தொடங்கும் என்று அவர் கூறினார்.

வணிகம், நிதி, சமூக ஊடக மேலாண்மை, பெறப்பட்ட நிதியை எவ்வாறு நிர்வகிப்பது, மிகவும் முறையான வணிகத்தை எவ்வாறு இயக்குவது என்பதை இப் பயிற்சி உள்ளடக்கி இருக்கும்.

கடன் வாங்கும் நிதி முறையாக நிர்வகிக்கப்படுவதை நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம். இதன் மூலம் அந்நிதி அதிக இந்திய தொழில்முனைவோரை உருவாக்க பயன்படுத்தப்படலாம்.

இந்திய சமூக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், ஸ்பூமி கோஸ் பிக் திட்டத்தைக் கண்காணிப்பதற்கான கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் டத்தோஶ்ரீ ரமணன் இவ்வாறு கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset