
செய்திகள் மலேசியா
சிலாங்கூர் மாநில அளவிலான மடானி நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தை பிரதமர் ரத்து செய்துள்ளார்: துங்கு நஸ்ருல்
புத்ரா ஜெயா:
சிலாங்கூர் மாநில அளவிலான மடானி நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ரத்து செய்துள்ளார்.
பிரதமரின் மூத்த செய்தித் தொடர்பாளர் துங்கு நஸ்ருல் அபைதா இதனை உறுதிப்படுத்தினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த எரிவாயு குழாய் தீ விபத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தும் வகையில் இப்பெருநாள் கொண்டாடத்தை பிரதமர் ரத்து செய்துள்ளார்.
இந்த பெருநாள் கொண்டாட்டம் நாளை பாங்கியில் நடத்த திட்டமிட்டப்பட்டிருந்தது என்றும் அவர் கூறினார்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளைய திட்டத்திற்கான அனைத்து உணவுப் பொருட்களையும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையங்களுக்கு விநியோகிக்க உத்தரவிட்டுள்ளார். அது முறைப்படி விநியோகிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்..
மேலும், பள்ளிகள், தங்குமிடங்கள், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உணவை விநியோகிக்கவும் அவர் உத்தரவிட்டார் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 5, 2025, 4:38 pm
மலாயாப் பல்கலைக்கழக இந்து சங்கத்தின் 29ஆம் ஆண்டு தேசிய அளவிலான சமயப் புதிர்ப் போட்டி
April 5, 2025, 4:36 pm
சாந்தா காளியப்பனின் விடியல் தூரமில்லை எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் நாளை வெளியீடு காண்கிறது
April 5, 2025, 4:33 pm