நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் கசிவு விபத்து: களத்திற்கு சென்று நேரடி ஆய்வில் ஈடுபட்டார் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் 

கோலாலம்பூர்: 

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் கசிவு காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ நிகழ்ந்த இடத்தை மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் 

இன்று காலை 9.40 மணிக்கு வந்த பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாருடன் சிலாங்கூர் மாநில பட்டத்து இளவரசர் தெங்கு அமீர் ஷா சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா, சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி வருகை புரிந்தனர் 

மேலும், அரசாங்க தலைமை செயலாளர் டான்ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் உடன் வருகை புரிந்தனர். 

விபத்து ஏற்பட்ட பகுதிகளையும் அதன் அண்மைய நிலவரங்களையும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கேட்டறிந்தார் 

பிறகு பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சந்தித்தார். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் புத்ரா ஹைட்ஸ் மசூதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset