நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட புத்ரா ஹைட்ஸ் குடியிருப்பாளர்கள் இழப்பீடு கோரலாம்; வழக்கறிஞர்

சுபாங்ஜெயா:

எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட புத்ரா ஹைட்ஸ் குடியிருப்பாளர்கள் இழப்பீடு கோரலாம் என்று வழக்கறிஞர் எம். மனோகரன் கூறினார்.

கடந்த  செவ்வாய்க்கிழமை புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த ஏ எரிவாயு குழாய் தீ விபத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள், 1993ஆம் ஆண்டு எரிவாயு விநியோகச் சட்டத்தின் கீழ் குற்றவாளியிடமிருந்து இழப்பீடு கோரலாம்.

சட்டத்தின் பிரிவு 30டி இன் கீழ், இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறார்கள்.

இதனால் அவர்கள் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து இழப்பீடு கோர முடியும் என்று அவர் கூறினார்.

குற்றவாளி வழக்குத் தொடரும் செலவுகள், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு ஆகிய இரண்டையும் செலுத்த வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பிக்கும் உரிமை நீதிமன்றத்திற்கு உள்ளது.

இந்த இழப்பீடு உடல் காயங்கள், சொத்து சேதம் அல்லது வருமான இழப்பு உள்ளிட்ட பல்வேறு இழப்புகளை ஈடுகட்ட முடியும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset