நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய இந்திய முஸ்லிம்களின் தமிழ்மொழி வளர்ச்சிக்கான பங்களிப்புகள் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும்: டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்

கோலாலம்பூர்:

மலேசிய இந்திய முஸ்லிம்களின்  தமிழ்மொழி வளர்ச்சிக்கான பங்களிப்புகள்  முறையாக பதிவு செய்யப்பட வேண்டும்.

மலேசிய இஸ்லாமியக் கல்வி அறவாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால் இதனை கூறினார்.

உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு வரும் மே 9,10,11ஆம் தேதிகளில் திருச்சியில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் மலேசிய இந்திய முஸ்லிம்கள் பேராளர்களாகக் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொறுப்பாளர்கள் இங்கு அழைக்க வந்துள்ளனர்.

அவர்களின் அழைப்பை ஏற்று திரளான மலேசிய இந்திய முஸ்லிம்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.

மலேசிய இந்திய முஸ்லிம்கள்  தமிழ்மொழி வளர்ச்சிக்கு பெரும்  பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். இதனை வரலாறு நெடுகிலும் நீங்கள் காணலாம்.

குறிப்பாக புலவர் பாமு அன்பர், இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது, மைதி சுல்தான், சை. பீர் முஹம்மது உட்பட பலர் வாழ்வின் இறுதிக் கட்டம் வரை தமிழ்மொழிக்காக இன்னாட்டில் வாழ்ந்துள்ளனர்.

தற்போது அவர்கள் இல்லை என்றாலும் அவர்களின இலக்கியப் பங்களிப்புகளை நினைவுகூர வேண்டும்.

குறிப்பாக இதுபோன்ற மாநாடுகளின்வழி தான் நமது பங்களிப்புகளை பதிவு செய்ய சிறந்த தளமாக அமையும்.

அதன் அடிப்படையில் மலேசிய சமுதாய மக்கள் இந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset