நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக வீடுகளில் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளது: அமிருடின் ஷாரி

சுபாங் ஜெயா: 

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் செப்பாங்கின் கோத்தா வாரிசானிலுள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். 

சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்து வாரியம் இந்த வீடுகளைத் தற்காலிகமாக வழங்கியுள்ளது.

அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த பின் பாதிக்கப்பட்டவர்கள் மாநிலத்தின் ஸ்மார்ட் சேவா திட்டத்தின் கீழ் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களில் அங்குக் குடியேறலாம் என்றார் அவர். 

தற்காலிக தங்குமிடம் குறித்து விவாதிக்க இன்று பெட்ரோனாஸ் நிறுவனத்துடன் தாம் சந்திப்பு நடத்தவிருப்பதையும் அமிருடின் சுட்டிக் காட்டினார்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

பாதிக்கப்பட்ட மக்கள் நீண்ட காலம் இரண்டு தற்காலிக மையங்களில் தங்குவது சாத்தியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

குறைந்தது இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு வாடகை ஒப்பந்தங்கள் தொடர்பான விஷயங்களை முதலில் தீர்க்க வேண்டும் என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset