
செய்திகள் மலேசியா
கூகுள் மேப்ஸ், வேஸில் இந்து ஆலயங்களை சட்டவிரோதமானது என முத்திரை குத்திய விவகாரம் சட்டம் 588 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது: டத்தோஶ்ரீ அயோப் கான்
கோலாலம்பூர்:
கூகுள் மேப்ஸ், வேஸில் இந்து ஆலயங்களை சட்டவிரோதமானது என முத்திரை குத்திய விவகாரம் சட்டம் 588 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது
தேசிய போலிஸ்படையின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை இதனை கூறினார்.
இவ்விவகாரத்தை போலிஸ் தகவல் தொடர்பு பல்லூடக சட்டம் (சட்டம் 588) இன் விசாரணை நடத்தி வருகிறது. இது இணைய துஷ்பிரயோகமாகும்.
தேச நிந்தனை கூறுகள் இருந்தால் தேச நிந்தனை சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும். மேலும் இது உள்ளடக்கத்தைப் பொறுத்தது என்று அவர் கூறினார்.
முன்னதாக் உரிமை கட்சியின் துணைத் தலைவர் டேவிட் மார்ஷல், கூகுள் மேப்ஸில் உள்ள இந்து கோவில்களில் உள்ள சட்டவிரோத கோவில்கள் என்ற முத்திரையை அகற்ற கூகுள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
கூகுளின் கீழ் இயங்கும் வேஸில் நடத்திய சோதனையில், சட்டவிரோத கோயில் என்ற முத்திரை கண்டுபிடிக்கப்பட்டது.
சட்டவிரோதமானதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலத்துடன் தொடர்புடைய ஒரு பேஸ்புக் குழுவின் நிர்வாகிக்கு தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம் சம்மன் அனுப்பிய சில நாட்களுக்குப் பிறகு இந்தப் பிரச்சினை எழுந்தது.
தலைநகரில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலை வேறு இடத்திற்கு மாற்றி, பள்ளிவாசல் கட்டுவதற்கு வழி வகுக்கும் திட்டத்தைத் தொடர்ந்து, இந்து கோயில் நிலப் பிரச்சினை சமீபத்திய விவாதப் பொருளாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 4, 2025, 5:58 pm
30 விழுக்காடு லாபத்தை நம்பி 6 லட்சம் ரிங்கிட்டிற்கும் ஏமாந்த முதியவர்
April 4, 2025, 5:50 pm
கிளந்தான் சந்தையின் மேற்கூரையில் ஆடவர் இறந்து கிடக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டார்
April 4, 2025, 5:25 pm
எரிவாயு குழாய் வெடித்த இடத்திற்கு அருகில் தோண்டும் பணி நடந்துள்ளது: போலிஸ்
April 4, 2025, 5:22 pm
நான் இனி இந்தப் பகுதியில் வசிக்க விரும்பவில்லை: நான் வீடு மாறிப் போகிறேன்: தியானா
April 4, 2025, 5:21 pm