
செய்திகள் மலேசியா
26 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய மக்களுக்கான அதே போராட்ட உணர்வைத்தான் கெஅடிலான் கட்சி இன்றும் கொண்டுள்ளது: டத்தோஶ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
26 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய மக்களுக்கான அதே போராட்ட உணர்வைத்தான் கெஅடிலான் கட்சி இன்றும் கொண்டுள்ளது.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் இதனை கூறினார்.
கெஅடிலான் கட்சி நிறுவப்பட்டு இன்று 26ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.
இந்த 26 ஆண்டுகள் என்பது மிகவும் ஆழமான ஒரு பயணம். மிகப் பெரிய போராட்டமாகும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் ஒரு கட்சியைக் கட்டியெழுப்ப அனைத்து உறுப்பினர்களும் ஒரு அணியாக ஒன்றிணைந்து போராடுகிறோம். இதுதான் நமது ஒற்றுமையின் உணர்வு.
நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் சீர்திருத்தக் குரலை வலுப்படுத்த நாங்கள் எப்போதும் ஒன்றாகவும் ஒற்றுமையாகவும் இருக்கிறோம்.
இந்த 26 ஆண்டுகளில், அரசியல் போராட்டங்களில் பல்வேறு ஏற்ற தாழ்வுகளை நாம் கண்டிருக்கிறோம். அவற்றை நாம் கடந்து வந்திருக்கிறோம்.
அதே வேளையில் இந்தப் போராட்ட உணர்வுதான் கெஅடிலான் கட்சிக்கு நாட்டை வழிநடத்தும் அதிகாரம் அளித்து கட்சியை மேலும் பலப்படுத்தியுள்ளது.
நாம் புத்ராஜெயாவை அடையும் வரை எல்லா கஷ்டங்களிலும் முழு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள் என்று டத்தோஶ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 4, 2025, 5:58 pm
30 விழுக்காடு லாபத்தை நம்பி 6 லட்சம் ரிங்கிட்டிற்கும் ஏமாந்த முதியவர்
April 4, 2025, 5:50 pm
கிளந்தான் சந்தையின் மேற்கூரையில் ஆடவர் இறந்து கிடக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டார்
April 4, 2025, 5:25 pm
எரிவாயு குழாய் வெடித்த இடத்திற்கு அருகில் தோண்டும் பணி நடந்துள்ளது: போலிஸ்
April 4, 2025, 5:22 pm