நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தலைக்கவசத்தைக் கொண்டு ஆடவர் தாக்கப்பட்ட விவகாரம்: வர்த்தகருக்கு 4300 ரிங்கிட் அபராதம் விதிப்பு 

மலாக்கா: 

தலைக்கவசத்தைக் கொண்டு ஆடவர் ஒருவர் தாக்கப்பட்ட வழக்கு விசாரணையில் வர்த்தகர் ஒருவருக்கு 4300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது 

வர்த்தகருக்கு எதிரான குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதால் ஆயிர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த தீர்ப்பினை அளித்தது 

குற்றஞ்சாட்டப்பட்ட 27 வயதான முஹம்மத் அரிஃப் இசாட்டிற்கு மாஜிஸ்திரேட் என். சிவஷங்கரி இந்த தீர்ப்பினை அளித்தார் 

கடந்த மார்ச் 27ஆம் தேதி 52 வயதான யுஸ்ரி ஓமாரை தலைக்கவசத்தைக் கொண்டு தாக்கியதன் காரணமாக வர்த்தகருக்கு எதிராக குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 324 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது 

அபராதத்தொகை செலுத்தவில்லை என்றால் 3500 ரிங்கிட் கூடுதல் அபராதம் விதிப்பு அல்லது ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி குறிப்பிட்டார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset