
செய்திகள் மலேசியா
ஆபாசப் படங்களை வைத்திருந்திருந்ததுடன் விநியோகித்த அரசு ஊழியர், கணக்காய்வாளர் உட்பட 4 பேர் கைது: டத்தோஶ்ரீ அயோன் கான்
கோலாலம்பூர்:
ஆபாசப் படங்களை வைத்திருந்திருந்ததுடன் விநியோகித்த அரசு ஊழியர், கணக்காய்வாளர் உட்பட 4 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.
தேசிய போலிஸ்படையின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை இதனை கூறினார்.
கடந்த பிப்ரவரி 24 முதல் மார்ச் 28 வரை ஆறு நாடுகளை உள்ளடக்கிய சைபர் கார்டியன் நடவடிக்கையின் மூலம் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை வைத்திருந்து விநியோகித்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
காஜாங், அம்பாங் ஜெயா, பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலம் ஆகியவற்றைச் சுற்றி 26 முதல் 49 வயதுக்குட்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் பல்வேறு மின்னணு சாதனங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 50,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஆபாசப் படங்களை வைத்திருந்ததனர்.
சிங்கப்பூர் காவல் படை தலைமையில் ஆறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தகவல், ஒருங்கிணைந்த நடவடிக்கையின் அடிப்படையில் நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 4, 2025, 5:58 pm
30 விழுக்காடு லாபத்தை நம்பி 6 லட்சம் ரிங்கிட்டிற்கும் ஏமாந்த முதியவர்
April 4, 2025, 5:50 pm
கிளந்தான் சந்தையின் மேற்கூரையில் ஆடவர் இறந்து கிடக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டார்
April 4, 2025, 5:25 pm
எரிவாயு குழாய் வெடித்த இடத்திற்கு அருகில் தோண்டும் பணி நடந்துள்ளது: போலிஸ்
April 4, 2025, 5:22 pm