நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான் இனி இந்தப் பகுதியில் வசிக்க விரும்பவில்லை: நான் வீடு மாறிப் போகிறேன்: தியானா

சுபாங்ஜெயா:

நான் இனி இந்தப் பகுதியில் வசிக்க விரும்பவில்லை. நான் வீடு மாறிப் போகிறேன்.

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குத்தகைதாரரான தியானா அப்துல் ரஹிம் இதனை கூறினார்.

தீயின் விளைவுகள் நம்ப முடியாதவை. அதன் பயங்கரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

நான் இந்தப் பகுதியில் வசிக்காமல் இருக்கத் திட்டமிட்டுள்ளேன். நான்  கண்டிப்பாக இடம் பெயர்வேன்.

நான் புத்ரா ஹைட்ஸ், ஜாலான் புத்ரா ஹார்மோனி பிரிவு 1/3 இல் வசித்து வந்தேன்.

மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையிடமிருந்து பெற்ற தகவலின் அடிப்படையில், வெடிப்பு நடந்த இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள தனது வாடகை வீடு 60 சதவீதம் சேதமடைந்ததாக அவர் கூறினார்.

சம்பவம் நடந்தபோது, ​​நான் என் குடும்பத்துடன் ஹரி ராயாவைக் கொண்டாட கிராமத்திற்கு சென்றிருந்தேன்.

ஆனால் ஒரு பெரிய தீ விபத்து ஏற்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset