நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிவாயு குழாய் வெடித்த இடத்திற்கு அருகில் தோண்டும் பணி நடந்துள்ளது:  போலிஸ்

சுபாங் ஜெயா:

புத்ரா ஹைட்ஸில் நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் தோண்டும் பணி நடந்துள்ளது.

சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமான் கான் இதனை கூறினார்.

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்து தொடர்பில் போலிசார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையில் எரிவாயு குழாய் வெடித்த இடத்திற்கு அருகில் தோண்டும் பணி நடந்துள்ளது .

வெடிப்பு நடந்த இடத்திலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அந்த இடத்தில் விடப்பட்ட அகழ்வாராய்ச்சி இயந்திரமும் புதைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 30 அன்று பணி நிறுத்தப்பட்டது.

கழிவுநீர் குழாய் மாற்றத்திற்காக பேக்ஹோ, அகழ்வாராய்ச்சி இயந்திரத்தைப் பயன்படுத்துவதில் ஈடுபட்ட மேம்பாட்டாளர், ஒப்பந்ததாரர், துணை ஒப்பந்ததாரர், தொழிலாளர்களை போலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.

ஆகையால் அகழ்வாராய்ச்சிப் பணியே சம்பவத்திற்குக் காரணமா என்பதைக் கண்டறிய தனது துறை மேலும் விசாரணைகளை நடத்த வேண்டும்.

புத்ரா ஹைட்ஸில் நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்திற்கு எரிவாயு, காற்று, தீப்பொறிகள் உள்ளிட்ட மூன்று கூறுகள் வழிவகுத்திருக்கலாம்.

சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, இதுவரை 56 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset