நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

30 விழுக்காடு லாபத்தை நம்பி 6 லட்சம் ரிங்கிட்டிற்கும் ஏமாந்த முதியவர் 

பெட்டாலிங் ஜெயா: 

உருவாகாத பண மோசடியில் சிக்கி 73 வயதுடைய முதியவர் ஒருவர் 6 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளார் 

சமூக ஊடகங்களில் கண்ட பண இரட்டிப்பு திட்டத்தை நம்பி அவர் தனது பணத்தை பறிகொடுத்துள்ளார் 

திட்டத்தின் முகவர் ஒருவர் மூலமாக பாதிக்கப்பட்டவர் அறிமுகமாகியிருந்ததாகவும் 30 விழுக்காடு வரை லாபம் ஈட்ட முதியவர் அதிகளவில் பணத்தை முதலீடு செய்ததாகவும் தங்காக் மாவட்ட காவல்துறை தலைவர் ரொஸ்லான் முஹம்மத் தலிப் கூறினார் 

கடந்த நவம்பர் முதல் மார்ச் 13 ஆம் தேதி வரை அனைத்து பண பரிவர்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

இருப்பினும், தனக்கு வரவிருந்த லாப தொகை முறையாக கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த அந்த முதியவர் காவல்துறையில் புகார் அளித்தார் 

இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 420இன் கீழ் விசாரணை செய்யப்படுவதாக ரொஸ்லான் தெரிவித்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset