நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிவாயு குழாய் தீ விபத்து; தற்காலிக நிவாரண மையங்களில் உள்ளவர்களுக்கு உரிய  மருத்துவ உதவிகள் வழங்கப்படும்: ஜூல்கிப்ளி

சுபாங்ஜெயா:

தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியிருக்கும் புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ உதவிகள் வழங்கப்படும்.

சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிப்ளி அஹ்மத் இதனை தெரிவித்தார்.

புத்ரா ஹைட்ஸ்  பள்ளிவாசலில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் ஏற்கெனவே நோய்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சுகாதாரப் பராமரிப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சுகாதாரப் பராமரிப்பு தடையின்றி இருப்பதைக் கண்டறியப்பட்டது.

மேலும் இந்த பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருந்துகள் குறித்த உடனடித் தகவல்களை வழங்கும் MySejahtera-வையும்  அமைச்சு பயன்படுத்தியது. 

மனநலம், உளவியல் சமூக ஆதரவு சேவைகள் அமைதியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவையும் மன உறுதியையும் உறுதி செய்கின்றன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset