
செய்திகள் மலேசியா
புத்ரா ஹைட்ஸ் மக்கள் மன நிம்மதியுடன் வீடுகளுக்கு திரும்ப வேண்டும்: பிரகாஷ்
சுபாங்ஜெயா:
புத்ரா ஹைட்ஸ் பாதுகாப்பான பகுதி என்ற மன நிம்மதியுடன் மக்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும்.
கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் இதனை வலியுறுத்தினார்.
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று கட்டம் கட்டமாக தங்களின் வீடுகளுக்கு அனுப்படுகின்றனர்.
தங்கள் வீடுகளை சோதனை செய்யவும் அதே வேளையில் வீட்டில் இருந்து பொருட்களை எடுக்கவும் அவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படுகிறது.
அதேவேளையில் இன்று காலை கார்கள் தேவைப்படும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிட்டத்தட்ட 25 கார்கள் வழங்கப்பட்டது.
இன்னும் பல விண்ணப்பங்கள் உள்ளதால் கட்டம் கட்டமாக அந்த கார்கள் வழங்கப்படும்.
இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் இன்று சம்பவ இடத்திற்கு வருகை தந்தார்.
விபத்தில் மின்சாதனங்களை இழந்தவர்களுக்கு அதை பெற்று தருவதற்கான உதவிகள் முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
ஆக தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து உரிய உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் நாங்கள் பாதுகாப்பாக வீடுகளுக்கு திரும்ப முடியுமா? இந்த இடத்தில் தொடர்ந்து பாதுகாப்பாக வாழ முடியுமா என்ற கேள்விகளை எழுப்புகின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்டு வீடுகளில் உரிய சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
மக்கள் மன நிம்மதியுடன் வீடு திரும்ப வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது என்று பிரகாஷ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 4, 2025, 5:58 pm
30 விழுக்காடு லாபத்தை நம்பி 6 லட்சம் ரிங்கிட்டிற்கும் ஏமாந்த முதியவர்
April 4, 2025, 5:50 pm
கிளந்தான் சந்தையின் மேற்கூரையில் ஆடவர் இறந்து கிடக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டார்
April 4, 2025, 5:25 pm
எரிவாயு குழாய் வெடித்த இடத்திற்கு அருகில் தோண்டும் பணி நடந்துள்ளது: போலிஸ்
April 4, 2025, 5:22 pm
நான் இனி இந்தப் பகுதியில் வசிக்க விரும்பவில்லை: நான் வீடு மாறிப் போகிறேன்: தியானா
April 4, 2025, 5:21 pm