நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்து; பாதிக்கப்பட்டவர்களுக்கு சேதமடைந்த மின் சாதனங்களை மாற்றுவதற்கு உதவிகள் வழங்கப்படலாம்: கோபிந்த் சிங்

சுபாங்ஜெயா:

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேதமடைந்த மின் சாதனங்களை மாற்றுவதற்கான வழிகளை இலக்கவியல் அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

அதன் அமைச்சர் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இதனை கூறினார்.

தற்காலிக நிவாரண மையங்களில் இருக்கும் பல பாதிக்கப்பட்டவர்கள் இந்த சம்பவத்தால் தங்கள் மின் சாதனங்கள் சேதமடைந்ததாக என்னிடம் கூறினர்.

கைத்தொலைபேசி, மடிக் கணிகள், கணினிகள் ஆகியவை இந்த மின் சாதனங்களில் அடங்கும்.

இதற்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து அமைச்சு தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.

ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் அறிவிப்பை அமைச்சு வெளியிடும்.

இன்று சம்பவக் கட்டுப்பாட்டு மையம், சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பிறகு அமைச்சர் கோபிந்த் சிங் இதனை கூறினார்.

இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் ஒரே உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவிகள் தொடரும்.

அதைவேளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உழைத்து வரும் அனைத்து இளகாக்களின் அதிகாரிகளுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும்.

ஆக மொத்தத்தில் மக்களின் பாதுகாப்புக்கும் அவர்களின் மறுவாழ்வுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கோபிந்த் சிங் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset