நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்டீவன் சிம்மின் வளர்ப்பு மகளின் குடும்பத்தினர் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினரிடம் 100 ரிங்கிட்டை திருப்பிக் கொடுத்தனர்

கோலாலம்பூர்:

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மின் வளர்ப்பு மகளின் குடும்பத்தினர் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினரிடம் 100 ரிங்கிட்டை திருப்பிக் கொடுத்தனர்.

இதை அமைச்சரின் சிறப்பு அதிகாரி ரோஸ்லி யூசோப் ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பரவிய காணொளியைத் தொடர்ந்து, அக்குடும்பத்தினர் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது புவாஸ் முகமது ஜானுக்கு 100 ரிங்கிட்டை திருப்பித் தந்துள்ளனர்.

அவர் அந்த சிறுமி தந்தையுடன் நடந்த வாட்ஸ்அப் உரையாடலின் ஸ்கிரீன் ஷாட்டையும் பகிர்ந்துள்ளார்.

தனது குடும்பத்தின் கௌரவத்திற்காக, அச்சிறுவனின் தந்தை, நன்கொடையாக பெற்ற பணத்தை திருப்பித் தந்தார்.

மேலும் இது தொடர்பில் போலீஸ் புகாரும் அளிக்கப்படும்.

அதன் பிறகு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரோஸ்லி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset