நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிலாங்கூர் மாநில பிபிபி கட்சி உதவி

சுபாங்ஜெயா:

புத்ரா ஹைட்ஸ்சில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிலாங்கூர் மாநில பிபிபி கட்சி உதவிக்கரம் நீட்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தலைமையிலான பிபிபி பொறுப்பாளர்கள் அவர்களுக்கு மின்சார உபகரணங்களை வழங்கினர்.

தீ விபத்தில்  பாதிக்கப்பட்ட அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு செல்லும் போது இந்த மின்சார உபகரணங்கள் பெரிதும் தேவைப்படும்.

தற்போது ஏராளமான உடமைகள் சேதம் அடைந்துள்ளது என்று அவர் சொன்னார்.

தீ விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தார்மீக ஆதரவை தெரிவிக்கவும் அவர்களுக்கு உதவிகள் வழங்கவும்   தற்காலிக நிவாரண மையத்தில்  தங்கியுள்ள மக்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நமது சகோதரர்கள் ஹரி ராயாவை கொண்டாடும் இந்த நேரத்தில் நிகழ்ந்த சம்பவத்தால் சுற்றுச்சூழலும், வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது என்று அவர் சொன்னார்.

இந்தச் சம்பவத்தை நிர்வகிப்பதில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும்  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ  முன்வந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

இந்த  ஒற்றுமை மலேசிய மக்களின் வலிமையின் அடையாளம் என்று அவர் சொன்னார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset