நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

என்னுடன் இணைந்து பிபிபி கட்சியை வலுப்படுத்த பாடுபடுங்கள்: டத்தோ லோகபாலா

கோலாலம்பூர்:

இந்த நாட்டில் பிபிபி கட்சி ஒரு பலமான கட்சியாக உருவெடுக்க என்னுடன் இணைந்து பாடுபடுங்கள்.

பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள பிபிபி உறுப்பினர்கள் தோளோடு தோளாக நின்று கட்சியை வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அப்போதுதான் பிபிபி கட்சி இந்த நாட்டில் ஒரு பலமான கட்சியாக உருவெடுக்கும் என்று அவர் சொன்னார்.

பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தமது 59ஆவது வயது பிறந்த நாளை  நேற்று விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தார்.

சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தலைமையில் இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

விலாயா மாநில பிபிபி கட்சியின் தலைவர் சத்யா சுதாகரன், சிகாம்பூட் பிபிபி தொகுதி தலைவர் டத்தோ வினோத், பிபிபி கட்சியின் தகவல் பிரிவு  தலைவர் ஸ்டீபன், துணை தலைவர் குமார், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

கோம்பாக்  தொகுதி ஏழுமலை , சிப்பாங் தொகுதி தலைவர் ஜேக்கப், ஜொகூர் மாநில தலைவர் கிருஷ்ணன், காப்பார் தொகுதி தலைவர் கதீர், சுபாங் தொகுதி தலைவர் நந்தா உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset