நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமூகத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களைப் பதிவிட்ட நபரை எம்சிஎம்சி விசாரித்தது

சைபர்ஜெயா:

இந்திய சமூகத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களைப் பதிவிட்ட நபரை எம்சிஎம்சி  விசாரித்துள்ளது.

இன உணர்வைத் தூண்டும் வகையில், அவமதிக்கும் உள்ளடக்கத்தைப் பதிவேற்றியதாகக் கூறப்படும் வாடிக்கையாளர் சேவை அதிகாரியான அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

மேலும் தடயவியல் பகுப்பாய்விற்காக அந்த நபரின் கைத்தொலைபேசி, சிம் கார்டும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

விசாரணைக்கு உதவுவதற்காக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் சந்தேக நபரின் உரையாடலின் பதிவும் எடுக்கப்பட்டது.

இந்த வழக்கு 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு பல்லூடக சட்டத்தின் பிரிவு 233 (1) (ஏ) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 500,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது இரண்டும் விதிக்க வகை செய்கிறது என்று எம்சிஎம்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset