நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய, மாநில அளவிலான இந்து அறநிலை வாரியம் உருவாக்கப்பட வேண்டும்: மலேசிய இந்து இளைஞர் பேரவை

கோலாலம்பூர்,

மலேசியா முழுவதும் இந்து மத சொத்துக்களை முறையாக நிர்வகிக்க தேசிய - மாநில அளவில் இந்து அறநிலை வாரியம் (Hindu Endowment Board)  அமைக்கப்பட வேண்டும் என மலேசியா இந்து இளைஞர் பேரவை (HYO) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

மலேசியா இந்து இளைஞர் பேரவைத் தலைவர் ஆனந்தன் சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கையில், “பினாங்கில் இந்து அறநிலை வாரியம் செயல்படும் நிலையில், மற்ற மாநிலங்களில் இதற்கான அமைப்பு இல்லாததால் கோயில்கள், நிலங்கள், மத சொத்துக்களின் நிர்வாகத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார்.

தீர்வுக்கான வழிகள்

இந்து அறநிலை வாரியத்தை அமைப்பதன் மூலம் இந்து மத சொத்துக்கள் பாதுகாக்கப்படும். நிதி மேலாண்மையில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். கோயில்கள் - இந்து சமூக நலத்திட்டங்களுக்கு நிலையான நிதி மானியம் கிடைக்கப்பெறும் என்பதையும் ஆனந்தன் சுப்ரமணியம் சுட்டிக் காட்டினார்.

மலேசியா முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டியது முக்கியம். இந்த நடவடிக்கையால் இந்துகள் ஆலயம் சார்ந்த பலன்களை தொடர்ந்து அனுபவிப்பார்கள். அதோடு அடிப்படை சிக்கல்களுக்கு எளிதில் தீர்வுக் காண முடியும் என அவர்  வலியுறுத்தினார்.

அதன் காரணமாக, தேசிய - மாநில அளவிலான இந்து அறநிலை வாரியத்தை உருவாக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேசியா இந்து இளைஞர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset