நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ரா ஹைட்ஸ் பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து: யார் பொறுப்பு?

கோலாலம்பூர்,

புத்ரா ஹைட்ஸ் பகுதியில் ஏற்பட்டஎரிவாய் தீ விபத்தில் 112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தத்தில் 49 வீடுகள் சேதமடைந்ததாகவும், ஒட்டுமொத்த சொத்து இழப்பு RM 55 மில்லியன் முதல் RM 80 மில்லியன் வரையிலான மதிப்பில் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 “மலேசியாவில் இதுவரை எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில்லை. இது தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய விபத்தாகக் கருதப்படலாம்”என கெராக்கான் கட்சியின் உதவித் தலைவர் டத்தோ பரமேஸ்வரன் இந்த விபத்து குறித்து வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிட்டுள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை?

பெட்ரோனாஸ் (PETRONAS)  உலகின் முன்னணி எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தால், இந்த விபத்து தடுக்கப்பட்டிருக்கும் என அவர் மேலும் சொன்னார்

குழாய் அமைக்கும் பணிகளுக்கான விவரமான பயன்பாடு கண்காணிப்பு (utility survey) நடத்தப்படாததுதான் இந்த விபத்திற்கான முதன்மைக் காரணம். MBSJ, DOE, PETRONAS, OSHA மற்றும் தீயணைப்பு துறைகள் போன்ற முக்கிய அமைப்புகள் இந்த விபத்துக்கு முன்பாகவே நுண்ணறிவு ஆய்வுகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

மக்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை யார் முன்னெடுப்பது?

சுற்றுச்சூழல் துறை (DOE) இதுவரை பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த அறிக்கையை வெளியிடவில்லை. கட்டுமானப் பணிகள் நடைபெறும் போது பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு மிகக் குறைவானது. மந்திரி பெசார் அறிவித்த RM 7,500 இழப்பீடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு போதுமானதல்ல என பரமேஸ்வரன் குறிப்பிட்டார்.

இப்படியொரு சம்பவம் இனி நடக்கக்கூடாது

சமூக ஊடகங்களில் இதுபற்றி பரவி வரும் போலியான தகவல்களை மறுக்கும் வகையில், அதிகாரப்பூர்வ விளக்கங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியம் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இவ்விபத்து தொடர்பாக பொதுமக்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும் பொறுப்பு உரிய அதிகாரிகளுக்கு உள்ளது. மேலும், இது போன்ற விபத்துகள் இனிமேல் நடைபெறாமல் இருக்க, எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என டத்தோ பரமேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset