நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிவாயு குழாய் தீ விபத்தால் மசிமோ ரொட்டிகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டது

சுபாங் ஜெயா:

சுபாங் ஜெயாவின் புத்ரா ஹைட்ஸில் ஏப்ரல் 1 ஆம் தேதி ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தைத் தொடர்ந்து மசிமோ நிறுவனத்தின் ரொட்டிகள் உட்பட பல உணவு பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்தத் தீ விபத்தங்கள் தொழிற்சாலைக்குத் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் தற்காலிக இடையூறு ஏற்படுத்தியதாகத் மசிமோ தெரிவித்துள்ளது.

மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் வரை காத்திருக்கும் அதே வேளையில், நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடைகளில் மசிமோ ரொட்டி, கேக் போன்ற இதர உணவுப் பொருட்களின் விநியோகம் குறைவாக இருக்கும் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

இந்தச் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மசிமோ நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை தொடர்பான மேலும் முன்னேற்றங்கள் அவ்வப்போது மசிமோவின் அதிகாரப்பூர்வச் சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

முன்னதாக, ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா, தெலுக் பங்லிமா கராங் மற்றும் போர்ட் கிளாங் உள்ளிட்ட பல பகுதிகளில் எரிவாயு விநியோகத்தைக் குறைப்பதாக தேசிய எரிவாயு நிறுவனம் தெரிவித்தது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset