நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜூலை மாதத்தில் ஓ.பி.ஆர் வட்டி விகிதம் 25 விழுக்காடு குறையலாம்: சிஐஎம்பி வங்கி 

கோலாலம்பூர்: 

இவ்வாண்டு ஜூலை மாத தொடக்கத்தில் பேங்க் நெகாரா ஓ.பி.ஆர் வட்டி விகிதத்தை 25 விழுக்காடு குறைக்க வாய்ப்புள்ளது என்று சிஐஎம்பி வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய பரஸ்பர வரி விதிப்பின் விளைவாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி மெதுவாகும் நிலை ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக ஓ.பி.ஆர் வட்டி விகிதம் 25 விழுக்காடு குறையலாம் என்ற சிஐஎம்பி வங்கி கூறியுள்ளது. 

பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டால், உள்நாட்டு தேவையை ஆதரிக்க விகிதத்தைக் குறைப்பது குறித்து பேங்க் நெகாரா பரிசீலிக்கலாம் என்று சிஐஎம்பி குறிப்பிட்டுள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை இறக்குமதிகள் மீதான புதிய பரஸ்பர வரிகளை அறிவித்தார், இது வரவிருக்கும் உலகளாவிய மந்தநிலை குறித்த பரவலான அச்சங்களைத் தூண்டியது.

மலேசியா மீதான வரி கம்போடியா (49 சதவீதம்), லாவோஸ் (48 சதவீதம்), வியட்நாம் (46 சதவீதம்), மியான்மர் (44 சதவீதம்), தாய்லாந்து (36 சதவீதம்), சீனா (34 சதவீதம்), தைவான் (32 சதவீதம்), இந்தோனேசியா (32 சதவீதம்) மற்றும் தென் கொரியா (25 சதவீதம்) ஆகியவற்றில் விதிக்கப்பட்டதை விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset