நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிவாயு குழாய் வெடிப்பு: விசாரணை முடிவுகள் நாளை அறிவிக்கப்படும்: அமிருடின் ஷாரி

ஷாஆலம்:

சுபாங் ஜெயாவின் புத்ரா ஹைட்ஸில் நடந்த எரிவாயு குழாய் தீ விபத்து தொடர்பான விசாரணையின் முடிவுகள் நாளை அறிவிக்கப்படும்.

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இதனை கூறினார்.

சிலாங்கூர் மாநில போலிஸ்  தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான்  தலைமையில் நாளை நடைபெறவிருக்கும் செய்தியாளர் கூட்டத்தில் இது அறிவிக்கப்படும்.

தற்போது, ​​அனைத்து வீடியோ பதிவுகள்,  தகவல் அறிக்கைகளையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.

மேலும் சிலாங்கூர் போலிஸ் தலைவர் தனது விளக்கக் கூட்டத்தில் நாளை இதனை தெரிவிப்பார். இது விளக்கப்பளிப்பு ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் நடைபெறும்.

இதன் பொருள் ஒவ்வொரு நாளும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும். 

அதில் ஒட்டுமொத்த முடிவுகள் மற்றும் விசாரணையின் அம்சங்கள், குற்றவியல், அலட்சியம், தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவை சம்பந்தப்பட்ட துறைகளால் வழங்கப்படும்.

ஷாஆலமில் உள்ள சிலாங்கூர் மாநில அரசின் தலைமையகத்தில் புத்ரா ஹைட்ஸ் பகுதியின் மறுவாழ்வுக்கான சிறப்புக் குழு கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர்  அவர் செய்தியாளர் கூட்டத்தில் இதனை  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset