நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மஇகா பணிப் படை உதவி: அண்ட்ரூ டேவிட்

சுபாங்ஜெயா:

புத்ரா ஹைட்ஸ்சில் நிகழ்ந்த எரிவாயு குழாய் தீ சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மஇகா பணிப் படை உதவிகளை வழங்கியது.

அப்பணிப் படையின் தலைவரும் மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான அண்ட்ரூ டேவிட் இதனை கூறினார்.

நமது சகோதரர்கள் ஹரி ராயாவை கொண்டாடும் இந்த நேரத்தில் நிகழ்ந்த சம்பவத்தால் சுற்றுச்சூழலும், வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் முகங்களைப் பார்க்கும் போது மிகவும் வேதனையை தந்தது. இந்தச் சம்பவத்தை நிர்வகிப்பதில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க முன்வந்த நண்பர்களுக்கும் நன்றி. இந்த ஒற்றுமை மலேசிய மக்களின் வலிமையின் அடையாளம் என்று அவர் சொன்னார்.

இந்த மாதிரியான பேரிடரில் இருந்து நாம் அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset