நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்து; கூடுதல் உதவி குறித்து அமைச்சரவை விவாதிக்கும்: மாட் சாபு

சுபாங்ஜெயா:

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் உதவி நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் அடுத்த புதன்கிழமை நடைபெறும் வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

கோத்த ராஜா நாடாளுமன்ற உறுப்பினரும்  விவசாயம், உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் முகமது சாபு இதனை தெரிவித்தார்.

மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்க புத்ராஜெயா உறுதிபூண்டுள்ளது.

அவர்களில் சிலர் கிட்டத்தட்ட அனைத்து உடைமைகளையும் இழந்ததாகக் கூறப்படுகிறது.

அதிகாரிகளின் சேத மதிப்பீட்டைப் பொறுத்து கூடுதல் நிவாரண நடவடிக்கைகள் இருக்கும்.

வீடுகளை இழந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் உதவி வழங்கத் தொடங்கியுள்ளார்.

மேலும் இழப்பின் அளவிற்கு ஏற்ப பிற உதவிகளும் வழங்கப்படும் என்று சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset