நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெடாவில் மூர்க்கத்தனமான நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்படலாம்:  மன்சோர் ஜக்காரியா

அலோர்ஸ்டார்:

கெடாவில் குடியிருப்பு பகுதிகளில் மூர்க்கத்தனமான இன நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்ப்பதற்கு தடை விதிக்கப்படலாம்,

இது தொடர்பான  வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும் என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்  மன்சோர் ஜக்காரியா கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பாலிங் அருகே உள்ள தாமான் டேசா பிடாரா என்ற இடத்தில் ஐந்து நபர்களை இரண்டு ரோட்வீலர் நாய்கள் தாக்கியது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மூர்க்கத்தனமான நாய்கள் குடியிருப்பு பகுதிகளில் வளர்க்க ஏற்றவை அல்ல.

மேலும், முந்தைய இரண்டு வழக்குகளுக்குப் பிறகு சமீபத்திய சம்பவம் மிகவும் தீவிரமானது.

ஏனெனில் இதில் ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் படுகாயமடைந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இந்த வழக்கை முடிந்தவரை சிறப்பாக தீர்க்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

அதனால் தான் இதுபோன்ற விஷயங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க வழிகாட்டுதல்களை வகுப்போம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset