நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ரா ஹைட்ஸில் நடந்த தீ விபத்து  சம்பவம் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்: ஷம்சுல் அனுவார்

சுபாங்ஜெயா:

புத்ரா ஹைட்ஸில் நடந்த தீ விபத்து சம்பவம் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.

உள்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா இதனை கூறினார்.

புத்ரா ஹைட்ஸில் நடந்த நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் குறித்து பொதுமக்கள் ஊகங்களை வெளிப்படுத்த வேண்டாம்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு சமூகம் போதுமான இடத்தை வழங்க வேண்டும்.

பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களைச் செய்வதாகவோ அல்லது சாதகமாகப் பயன்படுத்துவதாகவோ அடையாளம் காணப்பட்ட எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக தற்போதுள்ள சட்ட விதிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

உள்துறை அமைச்சு, போலிஸ்படை, தகவல் தொடர்பு, பல்லூடக் ஆணையம் ஆகியவை அவ்வப்போது நிலைமையைக் கண்காணித்து வருவதாக அவர் வலியுறுத்தினார்.

பொதுமக்களை தவறாக வழிநடத்தாதபடி, பொதுமக்கள் தவறான செய்திகளையோ, தகவல்களையோ பரப்புவதைத் தவிர்ப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

தகவல்களைப் பெற விரும்பும் பொதுமக்கள், சம்பந்தப்பட்ட குழுவின் வலைத்தளம் அல்லது அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கைகளை அணுகலாம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset