
செய்திகள் மலேசியா
வீடு முழுவதும் சாம்பல்; பெருநாள் உணவுகள் அப்படியே மேஜையில் இருந்தன: பாதிக்கப்பட்டவர்
சுபாங்ஜெயா:
வீடு முழுவதும் சாம்பல். பெருநாள் உணவுகள் அப்படியே மேஜையில் இருந்தன என்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் கூறியுள்ளார்.
சுபாங் ஜெயாவின் புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீப்பிடித்ததைத் தொடர்ந்து ஒரு குடியிருப்பு பகுதியே மிகப் பெரிய சேதத்தை எதிர்நோக்கியுள்ளன.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் படிப்படியாக தங்களின் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
சாம்பல் நிரம்பிய வீடுகளும் சிதறிய பொருட்களும் சில குடும்பங்களை தங்கள் வீடுகளுக்குத் திரும்ப மனதளவில் தயாராக இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக நோன்பு பெருநாள் உணவு வகைகள் இன்னும் அப்படியே மேஜையில் இருந்தன. பாதிக்கப்பட்டவர் அவசரமாக இருந்ததால் வீட்டை விட்டு வெளியேறியதே இதற்கு காரணமாகும்.
மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து ஜாலான் 1/3பி இல் உள்ள எனது வீட்டின் நிலைமையைக் கண்காணிக்க சென்றேன்.
எங்களின் வீடு பெரிய அளவில் சேதமடையவில்லை என்றும், ஆனால் வெளிப்புறம் சாம்பலால் நிரம்பியிருந்ததாகவும், உட்புறம் சீர்குலைந்திருந்ததாக பாதிக்கப்பட்ட சாரா அமிரா அஹ்மத் இட்ரிஸ் கூறினார்.
வீட்டிற்குள் முதன் முதலில் நுழையும் போது ஏற்படும் வாடையால் தலைச்சுற்றல் ஏற்படுகிறது. முதல் ராயா உணவுகள் இன்னும் மேஜையில் உள்ளன.
மேலும் கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லாமல் இருந்த குளிர்சாதன பெட்டியில் உள்ள உணவும் கெட்டு போனது.
இந்த வார இறுதியில் ஒரு திறந்த இல்லத்தை நடத்த விரும்பியதால் நாங்கள் நிறைய மூலப்பொருட்களை வாங்கினோம்.
ஆனால் அந்த ஆசை எல்லாம் மறைந்துவிட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 4, 2025, 11:17 am
தேசிய, மாநில அளவிலான இந்து அறநிலை வாரியம் உருவாக்கப்பட வேண்டும்: மலேசிய இந்து இளைஞர் பேரவை
April 4, 2025, 10:48 am
புத்ரா ஹைட்ஸ் பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து: யார் பொறுப்பு?
April 4, 2025, 10:46 am
எரிவாயு குழாய் தீ விபத்தால் மசிமோ ரொட்டிகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டது
April 4, 2025, 10:11 am
ஜூலை மாதத்தில் ஓ.பி.ஆர் வட்டி விகிதம் 25 விழுக்காடு குறையலாம்: சிஐஎம்பி வங்கி
April 3, 2025, 5:35 pm
எரிவாயு குழாய் வெடிப்பு: விசாரணை முடிவுகள் நாளை அறிவிக்கப்படும்: அமிருடின் ஷாரி
April 3, 2025, 5:34 pm